சாண்டில்யனின் படைப்புகளை தமிழக அரசு நாட்டுடைமையாக்கியுள்ளது

சாண்டில்யனின் கடல் புறா - பதிவு அறிமுகம்

தமிழ் வரலாற்றில் சரித்திரம் படைத்த நாவல்களில் மிக முக்கியமானவை கல்கி அவர்களின் பொன்னியின் செல்வனும், சாண்டில்யனின் ‘கடல் புறா'வும். இவைகளின் கதைநயம், கதையை விறுவிறுப்பாக கொண்டு செல்லும் பாங்கு, வாசகர்களைத் தூண்டும் வண்ணம் திருப்புமுனைகள் என்று சொல்லிக் கொண்டே செல்லலாம். சிலர் கடல்புறாவை பொன்னியின் செல்வனை விட சிறந்த நாவல் என்றும், சிலர் இரண்டும் சிறந்த நாவல்கள் என்றும், மற்றும் சிலர் பொன்னியின் செல்வனின் கதையம்சம் 'கடல் புறா'வில் குறைவு என்றும் குறிப்பிடுகின்றனர். எது எப்படி இருந்தாலும் இவை இரண்டும் தமிழ் நாவல் உலகின் பொக்கிஷங்கள் என்பதில் இரு வேறு கருத்து கிடையாது.

பொன்னியின் செல்வன் இணையத்தில் இங்கு படிக்கக் கிடைக்கின்றது.
ஆனால் கடல் புறா என்ற அரிய பொக்கிஷம் இணையத்தில் கிடைக்கவில்லை. இதை இணையத்தில் கொண்டு வர வேண்டுமென்ற நோக்கில் சில நண்பர்களுடன் கலந்தாலோசித்த போது உருவானது தான் இந்த தளம். இதில் படிப்படியாக 'கடல் புறா' நாவலை கொண்டு வர வேண்டுமென்பது தான் நமது நோக்கம். பொது நலமான இந்த நோக்கத்திற்கு அனைவரும் ஒத்துழைக்கும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.தன்னார்வ அடிப்படையில் ஸ்கேன் செய்யப்பட்ட 'கடல் புறா' நாவலை தட்டச்ச விரும்புபவர்கள் எங்களை அணுகவும். kadalpuraaonnet@gmail.com

8 comments:

Anonymous said...

நல்ல முயற்சி. வாழ்த்துக்கள்

Anonymous said...

"கடல் புறா" புத்தகம் உங்களிடம் இருக்குமானால் அதை ஸ்கேன் செய்து மின்னூலாக்கிவிடுங்கள் பிறகு அதற்கான சுட்டியை கொடுத்தால் விரும்பியவர்கள் பார்த்துக்கொள்வார்கள்.

பலர் இணைந்து பங்காற்றும் மகத்தான பல திட்டங்கள் இருக்கின்றன.

ஒரு புத்தகத்தை தட்டச்சு வதற்கு பலரின் உதவியை நாடி நிற்பது கேவலமாக உள்ளது. அதுவும் இலவசமாக கிடைக்கும் ப்ளொக்கரில்.

உங்களுக்கு ஆர்வம் இருக்குமானால் அதை அடுத்தவர் உதவி இன்றி செய்யப்பாருங்கள்.

அடுத்தவர் உதவியை நாடி செய்ய நினைக்கும் (ஒரு புத்தகத்தை) உங்கள் முயற்சி பெரிய விடயத்தை சாதிக்கப் போவதாக நினைத்துகொண்டு உங்கள் இயலாமையை அம்பலப்படுத்துகின்றது.

சாண்டில்யனின் கடல் புறா said...

///Anonymous said...

நல்ல முயற்சி. வாழ்த்துக்கள் //
நன்றி அனானி

சாண்டில்யனின் கடல் புறா said...

///"கடல் புறா" புத்தகம் உங்களிடம் இருக்குமானால் அதை ஸ்கேன் செய்து மின்னூலாக்கிவிடுங்கள் பிறகு அதற்கான சுட்டியை கொடுத்தால் விரும்பியவர்கள் பார்த்துக்கொள்வார்கள்.///
இது மிக சுலபமாக செய்யக் கூடிய விடயம் தான். ஆனால் எழுத்துருவில் இருக்கும் போது மேற்கோள் காட்ட நினைக்கும் போது இலகுவாக இருக்கும். வருடல் செய்யப்பட்டதை படிப்பதற்கும், எழுத்தில் இருப்பதை படிப்பதற்கும் பல மடங்கு வேறுபாடு உள்ளது.
///ஒரு புத்தகத்தை தட்டச்சு வதற்கு பலரின் உதவியை நாடி நிற்பது கேவலமாக உள்ளது. அதுவும் இலவசமாக கிடைக்கும் ப்ளொக்கரில்./// எங்கு கிடைக்கின்றது என்று தெரியவில்லை. விளக்கவும். இது கேவலம் ஒன்றும் இருப்பதாக தெரியவில்லை. சங்க கால இலக்கியங்கள் முதல் இன்றைய இலக்கியங்கள் வரை அனைத்தும் மின்னூலாகி பாதுகாக்கப் படுகின்றன. அதன் தொடர்ச்சியே இது. இது கேவலம் என்றால் தமிழுக்காக அந்த கேவலத்தை ஏற்றுக் கொள்ளத் தயார்.
///அடுத்தவர் உதவியை நாடி செய்ய நினைக்கும் (ஒரு புத்தகத்தை) உங்கள் முயற்சி பெரிய விடயத்தை சாதிக்கப் போவதாக நினைத்துகொண்டு உங்கள் இயலாமையை அம்பலப்படுத்துகின்றது./// நிச்சயமாக என் ஒருவனால் செய்ய இயலாத இயலாமையே. இதைச் சொல்வதில் வெட்கமில்லை.

VSK said...

ஒரு நல்ல முயற்சியைத் தொடங்க எண்ணி அதற்கு விருப்பம் உள்ளவர்களின் உதவியைக் கேட்பது எப்படி கேவலமாகும்?

'சா. கடல்புறா' அவர்களே!

உங்களுக்குத் தேவையானதெல்லாம் ஒரு 4 நண்பர்களின் உதவியே!

ஆளுக்கு ஒரு அத்தியாயம் மாதம் ஒருமுறை என முறை வைத்துக் கொண்டு இவர்கள் தட்டச்சித் தந்தால் முடிந்தது கதை.

என் உதவி இதில் உண்டு.

தளர்ந்துவிடாதீர்கள்!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

இணையத்தில் இதனை பொதுவில் வைப்பது தமிழ் மக்களுக்கு நல்லதுதான்.. ஆனால் அதற்கு முன்பாக ஒரு விஷயம்..

அமரர் சாண்டில்யனின் படைப்புகள் எதுவும் எனக்குத் தெரிந்து அரசுடைமையாக்கப்படவில்லையே..

இந்தப் புத்தகத்தின் பதிப்புரிமை வானதி பதிப்பகத்தாரிடம் உள்ளது.

அவர்களுடைய அனுமதியில்லாமல் நாம் அதனை தட்டச்சு செய்து பொதுவில் வைப்பது சட்டப்படி குற்றமாயிற்றே..

இதற்கென்ன பதில்..?

✪சிந்தாநதி said...

.

✪சிந்தாநதி said...

கல்கியின் படைப்புகள் நாட்டுடமை ஆக்கப் பட்டுள்ளன. எனவே எவரும் புத்தகமாகவோ மின்னூலாகவோ வெளியிட உரிமை உண்டு.

ஆனால் சாண்டில்யனின் படைப்புகள் நாட்டுடமை ஆக்கப் பட்டதாக தெரியவில்லை. எனவே அவரது குடும்பத்தினர் மற்றும் பதிப்புரிமை பெற்ற பதிப்பகத்தினர் தவிர மற்றவர்கள் சாண்டில்யனின் படைப்புகளை வெளியிட இயலாது.

எனவே தான் இணையத்தில் அவரது படைப்புகள் காணக் கிடைக்கவில்லை. எனவே சாண்டில்யனின் நூலை தட்டச்சு செய்தோ ஸ்கேன் செய்தோ வெளியிடுவது பதிப்புரிமை மீறல் ஆக வாய்ப்புண்டு. (ஆனாலும் இணையத்தில் வாசகர்களின் ஆர்வத்தினால் இத்தகைய வெளியீடுகள் வெளியிடப் பட்டு வருகின்றன என்பதும் உண்மை. )